ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயக்கப்படும்: சவுண்டு விடும் வேதாந்தா!

வியாழன், 6 டிசம்பர் 2018 (15:06 IST)
தூத்துக்குடியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என மக்கள் போராட்டம் நடத்தினர். 
இந்த போராட்டம் 100 வது நாளை எட்டியபோது மக்கள் பேரணியை நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 13 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. 
 
இதர்கு இடையில், தமிழக அரசின் ஆலை முடப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கக்கூடிய வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்து.
 
இந்த வழக்கின் தீர்ப்பு வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாகவே வந்தது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் இயக்க அனுமதி கொடுக்கலாம் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
இதை குறிப்பிட்டு வேதாந்தா நிறுவனம், தாங்கள் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்