நோஸ்கட் செய்த விஜயபாஸ்கர்: லாவகமா நழுவிய உதயநிதி!!

புதன், 5 ஆகஸ்ட் 2020 (13:46 IST)
உதயநிதி ஸ்டாலின் குற்றசாட்டை விஜயபாஸ்கர் மறுத்த நிலையில் லாவகமாக ட்விட் போட்டு தப்பியுள்ளார். 
 
இந்தியாவிலேயே கொரொனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்தன் அதிகளவில் பலியாவதாக செய்திகள் வெளியாகின்றன. இதுகுறித்து உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, 
 
இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் கொரோனாவால் பலியாவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் கொரோனா மரணங்களைத் தவணை முறையில் வெளியிடும் அடிமை அரசு, மருத்துவர்கள் நிலை குறித்தும் விளக்கியாக வேண்டும். எடுபிடிகளின் இந்த மெத்தனம் தமிழகத்துக்கே தலைகுனிவாகும் என்று தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இதனை விஜயபாஸ்கர் மறுத்ததை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கொரோனாவால் தமிழகத்தில் அதிக மருத்துவர் பலியாவதாக வந்த செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளார். அச்செய்தி பொய்யாக இருக்கவே நானும் விரும்புகிறேன். எனினும் கொரோனா பணியில் உயிர்த்தியாகம் செய்த அரசு - தனியார் மருத்துவர் - செவிலியர் உள்ளிட்ட முன்கள வீரர் விவரங்களை வெளியிட வேண்டும். 
 
அப்படி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கான நிவாரணதொகை உரியமுறையில் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும் தெரிவிக்கவேண்டும். சுகாதாரத்துறையினர் நம்பிக்கையுடன் பணியாற்ற இந்த வெளிப்படைத்தன்மை அவசியம். கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களின் நலனில் கழகமும் இளைஞரணியும் என்றும் அக்கறையுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்