போராடி வெற்றி –நர்ஸிங் காலேஜ் சீட் வாங்கி திருநங்கை தமிழ்ச்செல்வி சாதனை

புதன், 31 அக்டோபர் 2018 (14:00 IST)
மனித உரிமைகள் ஆணையத்தின் தலையீட்டால் வேலூர் நர்ஸிங் கல்லூரியில் சீட் பெற்று இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியராக சாதனை படைத்துள்ளார் தமிழ்ச்செல்வி

வேலூர் மாவட்டமத்தில் உள்ள புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.தமிழ்ச்செல்வி. திருநங்கையான இவர் 2017-2018 ஆம் ஆண்டுக்கான  பிளஸ் 2 பொதுத்தேர்வில் 74 சதவீத மதிப்பெண் பெற்றார். இதையடுத்து, அவர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படிப்பில் சேர விண்ணப்பித்தார். ஆனால் திருநங்கை என்ற காரணத்தினால் அவருக்கு சீட் கொடுக்காமல் மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழித்தது.

இதனையெதிர்த்து தமிழ்ச்செல்வி தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் மற்றும் இந்திய நர்ஸிங் கவுன்சில் ஆகியவற்றில் புகார் அளித்தார். ஆனால் அது சம்மந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மனதுடைந்த தமிழ்ச்செல்வி படிக்க சீட் கொடுங்கள் அல்லது என்னை கருணை கொலை செய்துவிடுங்கள் என தமிழக சுகாதாரதுறைக்கு மனு அனுப்பினார்.  இதனால் இந்த விவகாரம் மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்திற்கு சென்றது.

இதனையடுத்து அவருக்கு சீட் வழங்க கூறி மனித உரிமைகள் ஆணையம் சுகாதாரத்துறைக்கு பரிந்துரைத்தது. அந்த பரிந்துரையின் பெயரால் இப்போது அவருக்கு அரசு வேலூர்க் கல்லூரியில் நர்சிங் படிப்பில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்