சட்டப்பேரவையை நடத்தலாமா... வேண்டாமா... தனபால் யோசனை!!

வெள்ளி, 20 மார்ச் 2020 (12:25 IST)
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை தொடர்ந்து நடத்துவது குறித்து பிற்பகல் 1 மணிக்கு முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியா முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
 
இதன் ஒரு பகுதியாக தலைமைச்செயலகத்தில் முதல்வர் உள்பட அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு முன்னெச்சரிக்கை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மார்ச் 31 ஆம் தேதி வரை கொரோன அதொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், தமிழக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை முன்கூட்டியே முடிப்பது குறித்து பிற்பகல் 1 மணிக்கு முடிவு என சபாநாயகர் தனபால் சற்றுமுன் அறிவித்துள்ளார்.  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூட்டத்தை முன்கூட்டியே முடிப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று துரைமுருகன் டாஸ்மார்க் மற்றும் சட்டப்பேரவைக்கு விடுமுறையே இல்லை போல என பேசிய நிலையில் தற்போது இது குறித்து சபாநயகர் ஆலோசிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்