சர்கார் படம் தொடர்பாக வழக்கு பதியப்படும் : சி.வி.சண்முகம்

புதன், 7 நவம்பர் 2018 (19:05 IST)
நேற்றைய தினத்தில் வெளியான சர்கார் திரைப்படம்  மக்களின் ரசனையில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இன்று காலை முதலே பல அதிமுக அமைச்சர்கள் பலர் சர்காரை வெளுத்து வாங்கி வருகின்றனர். இப்போது அமைச்சர் சி,வி.சண்முகம் சர்கார் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடுக்கப் போவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை  அமைச்சர் கடம்பூர் ராஜு நடிகர் விஜயை  கடுமையாக விமர்சித்ததுடன் அறிவுறையும் கூறினார். சில காட்சிகளை நீக்க வேண்டுமெனெ எச்சரிக்கை விடுத்தார்.
 
இந்நிலையில் தற்போது அமைச்சர் கே.பி.அன்பழகன் சர்கார் படத்தைப் பற்றி கூறியுள்ளதாவது:
 
சர்கார் படத்தில் வரும் இலவசங்கள் வேண்டாம் என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அரசினைக் குறைகூறும் காட்சிகள் படத்தில் வந்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள்.
 
மக்களின் மனநிலை ஆளும் அரசுக்கு ஆதரவாகவே உள்ளது இவ்வாறு அவர் பேசினார்.
 
இந்நிலையில்  தற்போது தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளதாவது:
 
சர்கார் திரைப்படத்தை அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர், நடிகர் மீது வழக்கு பதியப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
 
ஆனால் இவ்விவகாரம் குறித்து நடிகர் விஜயோ, பட தயாரிப்பு நிறுவனமோ, சக நடிகர்களோ இதுவரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்