புத்தாண்டில் டாஸ்மாக் விற்பனை மந்தம்: தேர்தல் காரணமா?

வியாழன், 2 ஜனவரி 2020 (17:57 IST)
ஆண்டுதோறும் விழாக்காலங்களில் அதிகளவில் விற்பனையாகும் டாஸ்மாக் மது பாட்டில்கள் இந்த ஆண்டு குறைவாகவே விற்பனையாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆண்டு முழுவதும் வெவ்வேறு விழாக்காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை அதிகரிக்கும். புத்தாண்டு பண்டிகை அனைத்து மக்களும் கொண்டாடும் விழா என்பதால் டிசம்பர் 30 முதல் ஜனவரி 1 வரை மூன்று நாட்களுக்கு மது விற்பனை அதிகமாக இருக்கும்.

ஆனால் சென்ற வருடத்தை விட இந்த வருடம் விற்பனை மந்தமாக இருந்ததாகவே கூறப்படுகிறது. கடந்த ஆண்டு விற்பனை ஆனதை விடவும் இந்த ஆண்டு 1 கோடி ரூபாய் குறைவாகவே மது விற்பனை ஆகியுள்ளது. பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களினால் கடைகள் கால தாமதமாக திறக்கப்பட்டது காரணமாக சொல்லப்படுகிறது. ஆனாலும் விற்பனையில் மந்தநிலை நீடித்ததற்கு மக்கள் பலர் மது வாங்க ஆர்வம் காட்டாததும் காரணம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்