மத்திய அரசை விமர்சித்து அந்த வார்த்தையை குறிப்பிட்ட ஓபிஎஸ்: சட்டசபையில் பரபரப்பு

வியாழன், 6 டிசம்பர் 2018 (18:06 IST)
மேகதாது அனை கட்டுவதற்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதால், இது குறித்து முடிவு செய்ய இன்று சட்டசபை கூட்டப்பட்டது. 
 
இந்த கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளித்ததால் மத்திய நீர்வள ஆணையத்தை கண்டித்து தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதன் பின்னர் முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சி தலைவர் ஆகியோர் பேசினர். 
 
அப்போது துணை முதல்வர் ஓபிஸ் கூறிய ஒரு வார்த்தையால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அந்த வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.
 
அதாவது, ஓபிஎஸ் தனது உரையின்போது மத்திய அரசை விமர்சிக்க அந்த வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு அமோதித்து திமுக கட்சியை சேர்ந்த துரைமுருகனும் தனது கருத்தை வலு சேர்க்கும் வலையில் பேசினார்.  
 
இதனால், சபாநாயகர் தனபால் மத்திய அரசு தொடர்பாக பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்களை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்