தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை: தமிழக அரசு தகவல்

ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (16:34 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கி விட்ட நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பால் தமிழகத்தில் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர் 
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்துவந்தாலும், ஊரடங்கை அமல் படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி என்றும் ஆனால் அதே நேரத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது
 
தமிழகத்தில் என்னென்ன புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் இருப்பினும் ஊரடங்கு அதற்கு வாய்ப்பில்லை என்ற தகவல் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாகும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்