மறைந்த எஸ்.பிபிக்கு இரங்கள் அறிக்கை வெளியிட்ட மயிலை உயர் மறைமாவட்ட பேராயர்!

சனி, 26 செப்டம்பர் 2020 (23:40 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது.   

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அவர் கொரோனா சரியான பின்னரும் நேற்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததை எண்ணி அனைவரும் மிகுந்த வேதனை அடைந்துவிட்டனர்.  

இந்நிலையில் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பாடகர் மனோ, இயக்குனர் பாரதிராஜா, நடிகர் விஜய் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட  பேராயர் டாக்டர் அந்தோணிசாமி  எஸ்.பிபி மறைவு குறித்து ஒரு இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவுச் செய்தி  அவரது குடும்பத்தினருக்கும், கலை உலகத்தினருக்கும், ரசிகருக்கும், பொதுமக்களுக்கும் மட்டுமல்ல இம்மனுதரைப் பற்றி அறிந்த ஒவ்வொருவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்துயரமான நேரத்தில் அண்ணாரை இழந்து தவிக்கும் அவரது மனைவி, மகன், குடும்பத்தாருக்கும் கலைஉலகத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தின் சார்ப்பாக  எனது ஆழ்ந்த (  பேராயர் டாக்டர் அந்தோணிசாமி) அனுதாபங்களையும் செபங்களையும் உரித்தாக்கிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்