அத்திவரதர் தரிசனத்துக்கு இன்று முதல் புதிய கட்டுபாடு – கலெக்டர் அறிவிப்பு

வெள்ளி, 19 ஜூலை 2019 (14:13 IST)
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை தரிசிக்க ஏராளமானோர் வருவதால் புதிய கட்டுபாடுகளை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனத்தை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்தபடி உள்ளனர். ஆயிரக்கணக்கில் மக்கள் வருவார்கள் என்று கணக்கிட்ட மாவட்ட நிர்வாகம் அதற்கேற்றபடி வசதிகளை ஏற்பாடு செய்தது. ஆனால் தினமும் லட்சக்கணக்கில் மக்கள் வருவதால் நிர்வாகத்தால் சமாளிக்க முடியவில்லை.

மேலும் மக்களும் சரியான அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று லட்சக்கணக்கில் அத்திவரதரை தரிசிக்க மக்கள் கூடி விட்டதால் நகரமெங்கும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் உள்ளூர் மக்கள் இன்று மட்டும் அத்திவரதரை தரிசிக்க வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் லட்சக்கணக்கில் மக்கள் தரிசனத்துக்காக குவிந்துவிட்டனர்.

மூலவர் தரிசனமும் நடைபெறுவதால் மேலும் கூட்டம் அதிகமாகிறது. இதனால் இன்று முதல் அத்திவரதர் தரிசனம் மட்டுமே நடைபெறும். மூலவர் தரிசனம் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனை செய்யப்பட்ட பிறகு ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்