காளையார்குறிச்சி வெடிவிபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்!

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (15:02 IST)
காளையார்குறிச்சி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிப்பு!
 
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறார். 
 
அதன்படி, விருதுநகர் காளையார்குறிச்சி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், அந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரண தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்