அடிமை அரசின் அடுத்த அராஜகமா? ஜோதிமணி எம்பிக்கு பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்

புதன், 19 பிப்ரவரி 2020 (07:21 IST)
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு அட்சய பாத்திரம் என்ற அமைப்பின் மூலம் காலையில் ஊட்டச்சத்து வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் வழக்கம்போல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன
 
இது குறித்து ஜோதிமணி எம்பி கூறியதாவது: குழந்தைகள் பசி போக்கி,கல்விகொடுக்க  காமராசர் ஊர்ஊராக அரிசி வாங்கி தமிழ்நாடு முழுக்க ஆரம்பித்த திட்டம்.1955ல் இருந்து இன்றுவரை அரசு ஊழியர்களால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இப்பொழுது எதற்கு 'அட்சயபாத்திரம்' சத்துணவு வழங்க அனுமதிக்கப்படுகிறது? அடிமை அரசின் அடுத்த அராஜகம்
 
 
ஜோதிமணியின் இந்த ட்விட்டிற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு இதே அட்சயபாத்திரம் அமைப்புதான் மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது. அதேபோல் கர்நாடக மாநிலத்திலும் இதே அமைப்பு தான் மாணவர்களுக்கு சாப்பாடு போட்டு வருகிறது. இம்மாநில அரசுகளை எல்லாம் ஜோதிமணி அடிமை அரசு என கூறுவாரா? என்று பதில் அளித்து வருகின்றனர்
 
மற்ற மாநிலங்களில் இதே அட்சயபாத்திரம் மாணவர்களுக்கு உணவு வழங்குவதை எதிர்க்காமல், ஜோதிமணி தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பது ஏன் என்ற நெட்டிசன்கள் கேள்விக்கு ஜோதிமணி தக்க விளக்கம் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்