நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்? இதோ ஈஸி டிப்ஸ்!!

வெள்ளி, 10 ஜூலை 2020 (10:55 IST)
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வீட்டில் இருந்தவாரு என்ன செய்யலாம் என தெரிந்துக்கொள்ளுங்கள். 

 
கொரோனா தனது மோசமான பக்கத்தை காட்டி வரும் நிலையில் அதில் இருந்து தற்கத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டிய 10 விஷயங்களை தெரிந்துக்கொள்ளுங்கள். 
 
காலை ஒரு வேளை கபசுரக் குடிநீர் எடுத்துக்கொள்வது,
அவ்வப்போது சூடான தண்ணீர் குடிப்பது, 
உப்பு மற்றும் மஞ்சள் கலந்த மிதமான வெந்நீரில் காலை மாலை இரு வேளையும் வாய் கொப்பளிப்பது, 
துளசி அல்லது வேப்பிலையில் மஞ்சள் பொடி மற்றும் உப்பு கலந்த நீரில் நீராவி பிடிப்பது, 
மஞ்சள் கலந்த பாலில் மிளகு பொடி கலந்து காலை மாலை இரு வேளையும் பருகுதல்,
மூலிகை டீ, மற்றும் வேப்பம் பூ ரசம், தூதுவளை ரசம், மிளகு ரசம் இவற்றுள் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். 
அன்னாசி, ஆரஞ்சு, சாத்துக்குடி பழச்சாறு அருந்தலாம்.
தினமும் 15 முதல் 20 நிமிடம் காலை 7.30 மணிக்குள் அல்லது மாலை 5 முதல் 6 மணிக்குள்ளாக சூரியக் குளியல், 
 
ஆகியவற்றை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யலாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்