மின்சார சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு – பிரதமருக்கு கடிதம் எழுதிய எடப்பாடியார்

சனி, 9 மே 2020 (11:53 IST)
மத்திய அரசின் புதிய மின்சார சட்ட திருத்தத்தை நிறுத்தி வைக்க கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மத்திய அரசு புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவை ஏற்படுத்தியுள்ளது. இது மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் செயல் என பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மின்சார சட்ட மசோதா மாநில அரசுகளின் உரிமையை மீறுவதாக உள்ளதாக தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விவசாய நிலங்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது மாநில அரசின் தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர், தற்போது கொரோனா பாதிப்புகளில் மாநில அரசுகள் கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்த மசோதா குறித்து ஆய்வு செய்து கருத்துகள் தெரிவிக்க அவகாசம் இல்லையென்றும், எனவே மசோதாவை ஒத்தி வைக்கும்படியும் அந்த கடித்தத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்