சசிகலா செலுத்திய ரூ.10 கோடி அபராதம் ஏற்கப்பட்டதா? வழக்கறிஞர் தகவல்!

வியாழன், 19 நவம்பர் 2020 (08:22 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் நான்காண்டு சிறைத் தண்டனையோடு ரூபாய் 10 கோடி அபராதமும் சசிகலாவுக்கு விதிக்கப் பட்டது. இந்த அபராத தொகையை நேற்று அவரது தரப்பினர் செலுத்தியதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது சசிகலாவின் வழக்கறிஞர் இதுகுறித்து விளக்கம் அளித்தபோது சசிகலா செலுத்திய ரூபாய் 10 கோடி அபராதத்தை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார் 
 
மேலும் ரூ.10 கோடி செலுத்தப்பட்டதற்கான ரசீது பார்ப்பன அரசு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். எனவே சசிகலாவின் அபராதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் வரும் ஜனவரி மாதம் விடுதலை ஆவது கிட்டத்தட்ட உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது 
 
அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ஜனவரி மாதம் சசிகலா விடுதலை ஆவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்