காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் காலமானார் ! கங்கிரஸார் அதிர்ச்சி

சனி, 20 ஜூலை 2019 (16:22 IST)
1988 ஆம் ஆண்டுமுதல் 2013 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் முதல்வராகப் பணியாற்றிய  பெருமைக்குரியவரும்  காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் (81)  காலமானார். இந்த செய்தி நாட்டில் உள்ள ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சித் தொண்டரக்ளுக்கும் பெரும் அதிர்ச்சி  அடைந்துள்ளனர்.
உடல்நலக் குறைவால் டெல்லி மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட ஷீலா தீட்சித் காலமானார்.  கடந்த 1938 ஆம் ஆண்டு மார்ச் 31 ல் பிறந்த ஷீலா தீட்சித் பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவை சேர்ந்தவர். கேரளா மாநிலத்தின் ஆளுநராகவும் அவர் பதவிவகித்துள்ளார்.ராஜிவ் காந்தி அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சராகவும் ஷீலா தீட்சித் பதவி வகித்துள்ளார். மேலும் பிரிட்டம் முன்னாள் பிரதமர் மார்கரேட் தாட்சரை நினைவுபடுத்தும் வகையில் பணியாற்றியவர் ஷீலா தீட்சித்  என்று காங்கிரஸார் அவருக்கு புகழஞ்சலி செலுத்திவருகின்றனர்.
 
சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தொகுதியில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டி தோல்விஅடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்