வேலூர் மக்களவை தேர்தல்: கமல், தினகரன் போட்டியிடாதது ஏன்?

வியாழன், 18 ஜூலை 2019 (22:02 IST)
வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வேட்பாளரை அறிவித்து களத்திலும் பிரச்சாரத்தில் இறங்கி விட்ட நிலையில் தினகரனின் அமமுக வேலூர் தொகுதியில் போட்டியிடவில்லை என ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியும் வேலூர் தொகுதியில் போட்டியிடவில்லை என இன்று அறிவித்துள்ளது 
 
வேலூர் தொகுதி தேர்தல் எதற்காக நிறுத்தப்பட்டதோ அந்த காரணம் அப்படியே இருக்கும் நிலையில் அதே வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடும் நிலையில் இந்த தேர்தல் நியாயமானதாக இருக்காது என்பதால் போட்டியிடவில்லை என கமலஹாசன் போட்டியிடாததற்கு ஒரு காரணத்தை கூறியுள்ளார் இந்த காரணம் ஏற்கும் வகையில் இல்லை. ஏனெனில் தேர்தல் அறிவிப்பு வந்த மறுநாளே இந்த முடிவை கமலஹாசன் அறிவித்திருந்தால் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கடைசி நேரத்தில் அவர் திடீரென தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளதால் அவரது கட்சி படுதோல்வி அடைந்து விடும் என்ற பயத்தால் தேர்தலில் இருந்து ஒதுங்கியது போல் தெரிகிறது 
 
மேலும் இந்த தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளில் ஒரு கட்சி வெற்றி பெறும், இன்னொரு கட்சி இரண்டாம் இடம் பிடிக்கும் என்பது உறுதியாகிவிட்டது. மூன்றாம் இடம் எந்த கட்சி என்பது தான் இப்போதைய கேள்வியாக உள்ளது. மக்களவைத் தேர்தலில் அமமுக, மக்கள் நீதி மையம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை மாறி மாறி மூன்றாம் இடத்தை பிடித்தன. இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சியும் தினகரன் கட்சியும் இந்த தேர்தலில் ஒதுங்கிவிட்டதால் வேலூர் தொகுதியில் மூன்றாமிடம் நாம் தமிழர் கட்சிக்கு தான் என்பது தற்போது உறுதியாகியுள்ளது 
 
தேர்தலை சந்திப்பது என்பது ஒரு அரசியல் கட்சிக்கு ஜனநாயகரீதியாக கிடைக்கும் வாய்ப்பு. அந்த வாய்ப்பை நழுவ விடுவது தேர்தல் தோல்வி பயத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்வதையே காண்பிப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து கூறி வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்