கொரோனா ஃப்ரீ மாவட்டங்கள்: கனிசமாக உயரும் எண்ணிக்கை!

வியாழன், 14 மே 2020 (10:19 IST)
தமிழகத்தின் 5 மாவட்டங்கள் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நேற்று புதிதாக 509 பேருக்கு கண்டறியப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்துள்ளது. 
 
தமிழக தலைநகரான சென்னையில் மட்டும் நேற்று 380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5262 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் கொரோனாவில் குணமடிவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவதாலும், தமிழகத்தின் சில மாவட்டங்களில் கடந்த 15 - 20 நாட்களுக்கு மேலாக புதிய தொற்றுள்ள நபர்கள் இல்லாமல் இருப்பதும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது. 
 
அந்த வகையில் ஈரோடு, சிவகங்கை, திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால், இந்த ஐந்து மாவட்டங்கள் தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்