நவராத்திரியின் போது வீட்டிற்கு வருபவர்களுக்கு என்னவெல்லாம் கொடுக்கலாம்....?

நவராத்திரியின் முதல் 3 நாள்கள் மலைமகளின் அம்சமான துர்கை அம்மனுக்கு உரியது. முதல் நாள் மகேஸ்வரி அம்மனை நினைத்துதான் நவராத்திரியைத் தொடங்க வேண்டும். வீட்டு வாசற்படியில் புள்ளி வைத்து, கம்பிக் கோலம் போடவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

மாலையில் அம்மனுக்கு மல்லிகைப்பூ, வில்வ இலையால் அலங்காரம் செய்து விட்டு, தீபம் ஏற்றி, வெண்பொங்கலை நைவேத்தியமாகப் படைத்து, வழிபாடு செய்ய  வேண்டும்.
 
முடிந்தால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், உறவினர்களை வீட்டிற்கு அழைத்து, தாம்பூலத்தை தானமாக கொடுப்பது சிறப்பினைத் தேடித்தரும். குறிப்பாக முதல்  நாளில் பச்சை நிறம் மிகவும் உகந்ததாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே, வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கும், கன்னிப் பெண்களுக்கும், பச்சை  நிறத்தில் வளையல் அல்லது பச்சை நிற ரவிக்கை துணி இப்படிப்பட்ட பொருள்களை தாம்பூலத்தில் வைத்துக் கொடுப்பது மேலும் சிறப்பினைத் தேடித்தரும்.  இதனோடு அம்மனுக்கு படைத்த வெண்பொங்கலையும் கொடுக்க வேண்டும்.
 
வளையல், ரவிக்கைத்துணி என்று எதையுமே தானமாக கொடுக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. வீட்டில் வருபவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பூ, நெற்றியில் இட்டுக்கொள்ளக் குங்குமம் மட்டும் கொடுத்தால் கூடப்போதும். இந்த வகையில் முதல் நாள் வழிபாட்டை நிறைவாகச் செய்து முடித்தால், வீட்டில்  இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வறுமை இல்லாத, செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு வழி பிறக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்