திரிகடுகு சூரணத்தின் பயன்கள் பற்றி தெரிந்துகொள்வோம்...!!

திரிகடுகு என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் கலவையே ஆகும். பொதுவாக சுக்கு நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். இதனால் இதனை நிறைய  அஜீரணக் கோளாறுக்கான மருந்துகளில் முதன்மையாக சேர்க்கின்றனர். சாதாரண சளி, இருமல் ஆகியவற்றிற்கு தொன்றுதொட்டு நாம் உபயோகப்படுத்துவது  மிளகைத்தான்.

திப்பிலி இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு இவற்றைக்குணமாக்கும். காது, மூக்கு சம்பந்தப்பட்ட கப நோய்களையும் போக்கும்.உடலில் நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
 
திரிகடுக சூரணத்தை பயன்படுத்துவதால் பலவித நோய்களுக்கும் தீர்வாக இருக்கும். விட்டுவிட்டு வரும் முறைக்காய்ச்சலைப் போன்ற பலவித காய்ச்சல்கள், வயிற்று உப்புசம், உணவில் விருப்பமின்மை, பசியின்மை, செரிமான பிரச்சனையால் வரும் நோய்கள், கழுத்தில் தோன்றும் நோய்கள், தோல் நோய்கள், இருமல், ஜலதோஷம், சர்க்கரை போன்ற நோய்களுக்கு  திரிகடுக சூரணத்தை தேனுடன் சேர்த்துத் தரப்படுகிறது.
 
நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல பிரச்சனைகளை தீர்க்கவல்லது. நெஞ்சு சளி, ஜலதோஷத்தை நீக்கும். நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின்  செயல்திறனை கூட்டும். இம்மண்டல பலவீனத்தை போக்கும்.
 
நுரையீரலின் உயிர் சக்தியை அதிகபடுத்தும். கபம் சார்ந்த பிரச்சனைகளை போக்கும். இன உறுப்புகளின் கோளாறுகளை நீக்கும். ஆண்களின் விந்தடைப்பு என்ற பிரச்சனைக்கும் திரிகடுக சூரணத்தை பயன்படுத்துகின்றனர்.
 
மேலும் உடல் எடை கூடிய நோயாளிகள், அதிக கொழுப்பு சத்துள்ள நோயாளிகள், தைராய்டு குறைவாக சுரக்கும் நோயாளிகள், உடல் வீக்கம் சார்ந்த நோயாளிகள்,  மற்றும் வளர் சிதை மாற்றமுள்ள நோயாளிகளில் இந்த மருந்து தக்க துணை மருந்துகளோடு நன்றாக வேலை செய்யும்.
 
செரிமான சுரப்பி, வயிற்றில் சுரக்கும் நொதி கோளாறுகள் என எப்படி இருந்தாலும் சரி செய்துவிடும். வலிகளை போக்கும் மருந்துகளில், இந்த மருந்தை பல வலி நிவாரண மூலிகை மருந்துகளின் சேர்க்கையோடு சேர்ப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
 
திரிகடுகு, திரிகடுக சூரணம், பயன்கள், ஆரோக்கியம், இயற்கை மருத்துவம், மருத்துவ குறிப்புகள், Thirikaduguku, Thirikadugu Chooranam, Uses,  Health, Natural Medicine, Medical Tips
 
Learn about the benefits of Thirikadugu Chooranam...!!
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்