எளிதில் கிடைக்கும் முருங்கைக்கீரையில் இத்தனை பயன்கள் உள்ளதா....!!

முருங்கையின் எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் நமக்கு பயன் தருகிறது.  முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில்  வதக்கி இதனுடன் 5 பல் பூண்டு, 5 மிளகு இதனுடன் சீரகம் பொடித்துப்போட்டு தினமும் மதிய உணவு வேலையிலே சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட பலவிதமான நன்மைகளை உடலுக்கு கொடுக்கிறது. 
ரத்தசோகை உள்ளவர்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளொபின் அளவு அதிகரித்து உடலை சீராக வைத்துக் கொள்ளும். மாதவிடாய் நேரத்தில்  வரும் வயிற்று வலி குணமடையும்.
 
மற்ற கீரைகளில் உள்ள இரும்புச்சத்தினை விட 75 சதவீத அதிக சத்து முருங்கை கீரையில் உள்ளது. ஆரஞ்சைவிட 7 மடங்கு விட்டமின் ‘சி’  உள்ளது. பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம் உள்ளது. கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு விட்டமின் ‘ஏ’ உள்ளது.  வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் உள்ளது. தயிர் பாலாடைக் கட்டியில் உள்ளது போல 2 மடங்கு புரதச்சத்து உள்ளது.
 
முருங்கை ஈர்க்கை எடுத்துக் கொண்டு இதனுடன் மிளகு, சீரகம் சோம்பு சேர்த்து கொதிக்க சூப் செய்து குடிக்க காய்ச்சல், கைகால்வலி,  மூட்டுவலி, வயிற்றுப்புண் நீங்கும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.
 
முருங்கைப்பூ ஒரு கைப்பிடியளவு எடுத்துக்கொண்டு 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி காலையில் உணவிற்கு முன் சாப்பிட்டு வர ஆண்மை  தன்மையை அதிகரிக்கும்.
 
முருங்கைப்பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்திவந்தால் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் இருப்பவர்களுக்கு நாட்டம் உண்டாகும். இதை இயற்கையான வயகரா எனக் கூறலாம்.
 
முருங்கை பட்டையை சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும். முருங்கைவேர் சாற்றுடன் பால்  சேர்த்து கொதிக்கவைத்து அருந்தினால் விக்கல், இரைப்பு, உடல் வலி, கைகால் வலி குறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்