அற்புத மருத்துவ நன்மைகள் கொண்ட சோற்றுக் கற்றாழை...!

கற்றாழையில் உள்ள இயற்கையான நார்ச்சத்துக்கள், மலச்சிக்கலை நீக்கி செரிமான அமைப்பை சீராக்கும். கற்றாழை உள்ளே இருக்கும் சோற்று பகுதியை கரண்டியளவு சாப்பிட்டு வர வெப்ப நோய்கள் யாவும் தீரும்.
சரும அழற்சியை குணப்படுத்துவதை போலவே, உடலுக்குள் ஏற்பட்டுள்ள அழற்சியை கற்றாழை குணப்படுத்தும். செரிமான குழாய்களை அமைதிப்படுத்தும். சாப்பிட்ட பின் செரிமான அமைப்பை குளிர்ச்சியடைய வைக்க, இது ஒரு சிறந்த வழியாகும்.
 
கற்றாழை மிகப்பெரிய அலர்ஜி எதிர்பானாக விளங்குகிறது. அதனால் சருமத்தில் படை, சிரங்கு, அரிப்பு போன்ற நோய்களுக்கு சிகிச்சை  அளிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
 
கற்றாழை ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசராக விளங்கும். அதனை வீட்டிலேயே வளர்க்கவும் செய்யலாம். கற்றாழையின் ஜெல் சருமத்தில் ஏற்படும்  சுருக்கத்தை தடுப்பதில் சிறந்தது.
 
கற்றாழை ஜெல்லில் அதிகப்படியான ஈரப்பதம் அடங்கியுள்ளது. அதனால் அதனை சருமத்தில் தடவினால், சருமத்திற்கு நீர்ச்சத்து கிடைத்து,  அதன் மீள்தன்மை அதிகரிக்கும்.
 
கற்றாழை குளிர்ச்சி ஏற்படுத்தும் செடியாக விளங்குவதால், எரிச்சல்கள் மற்றும் வெந்த புண்களுக்கு அதனை பயன்படுத்தலாம். இது சரும  திசுக்களை வேகமாக சரிசெய்யும்.
 
அடிபட்ட வீக்கங்களுக்கு வைத்து கட்டி வர வீக்கம் தீரும். முக அழகு கொடுக்கும் எல்லா களிம்புகளிலும் கற்றாழை சேர்க்கப்படுகிறது. சோற்றை நன்றாக மிக்சியில் அரைத்து முகத்தில் பூசி வரலாம். முகம் பளபளப்பாக மாறிவிடும்.
 
இளம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான நோய்களுக்கு, கற்றாழையை சர்க்கரையுடன் கலந்து நன்றாக மிக்சியில் அரைத்து,  கரண்டியளவு சாப்பிட தீரும்.
 
கற்றாழை சோற்றை, எண்ணெய் சேர்த்து தைலம் பண்ணி, தலைக்கு தேய்த்து வர முடி நன்றாக கருமையாக வளரும். தூக்கம் சிறப்பாக  வரும். மேலும் அதில் வடியும் பாலினை காயவைத்து கிடைக்கும் பொருளுக்கு மூசாம்பரம் என்று பெயர். இதனை ரத்த கட்டிற்கு நீரில்  அரைத்து போட தீரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்