டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு 24 மணி நேரம் கெடு: பரபரப்பு தகவல்

செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (17:38 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்த போதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகக் குறைவாகவே பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது. 
 
ஆனால் திடீரென டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்து கொண்டு அந்தந்த மாநிலங்களுக்கு திரும்பியவர்களால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. உதாரணமாக தமிழகத்தில் ஓரிருவர் மட்டுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழகத்தில் இருந்து டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்களால் தற்போது 600க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இவர்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகம் உள்பட பல மாநிலங்களிலும் டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பியவர்களால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. இந்த நிலையில் பஞ்சாப் சுகாதாரத்துறை ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் உடனடியாக அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு தெரிவிக்காவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்