மேற்கு வங்க அரசுக்கு ரூ.1,000 கோடி நிதி: பிரதமர் மோடி அறிவிப்பு

வெள்ளி, 22 மே 2020 (13:28 IST)
மேற்கு வங்க அரசுக்கு ரூ.1,000 கோடி நிதி
வங்க வங்க கடலில் தோன்றிய அம்பன் புயல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 180 கிலோ மீட்டர் வரை சூரை,க்காற்று வீசியதால் மேற்கு வங்கத்தில் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டது. குறிப்பாக கொல்கத்தா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது 
 
இந்த புயலால் 72 பேர் பலியானதாகவும் லட்சக்கணக்கான கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்ததாக தகவல்கள் வெளிவந்த நிலையில் மேற்கு வங்க அரசு தீவிரமாக கடந்த இரண்டு நாட்களாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது
 
இதனையடுத்து இன்று மேற்கு வங்கத்தில் புயல் சேதமான இடங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி வருகிறார் என்ற தகவல் வந்தது. சற்று முன்னர் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டார் அதன் பின்னர் அவர், ‘மேற்கு வங்க மாநில அரசுக்கு ரூபாய் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக அறிவித்தார். அதுமட்டுமன்றி அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் துணை நிற்கும் என்றும் அவர் கூறியுள்ளார் முதல்கட்டமாக மேற்கு வங்க அரசுக்கு ரூ 1000 கோடி நிதி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்