ஒரு தென்னிந்தியர் இல்லை, ஒரு பெண் கூட இல்லை: இதற்கு பெயர் கலாச்சார ஆய்வா?

செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (13:52 IST)
ஒரு தென்னிந்தியர் இல்லை, ஒரு பெண் கூட இல்லை
இந்திய கலாச்சார தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து முழுமையாக ஆய்வு செய்ய மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இதற்காக ஒரு ஆய்வு நிபுணர் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது
 
இதனை அடுத்து சமீபத்தில் இந்த ஆய்வை நடத்துவதற்கு ஒரு நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த நிபுணர் குழுவில் மொத்தம் 16 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மத்திய கலாச்சாரம் சுற்றுலாத்துறைத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்கள் உறுதி செய்துள்ளார்.
 
ஆனால் இந்த குழுவிற்கு தென்னிந்தியாவில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கலாச்சார தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யும் குழுவில் ஒரு தென்னிந்தியர் கூட இல்லை என்றும் அது மட்டுமின்றி ஒரு பெண் ஆய்வாளர் கூட இடம்பெறவில்லை என்றும் தென்னிந்தியாவின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது
 
ஒரு தென்னிந்தியர் மற்றும் ஒரு பெண் கூட இல்லாத குழு எப்படி இந்தியாவின் கலாச்சார தோற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் ஆய்வு செய்ய முடியும் என்று தென்னிந்திய தரப்பில் இருந்து கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளது. இதனை அடுத்து 16 பேர் கொண்ட குழுவில் தென்னிந்தியர்கள் மற்றும் பெண்கள் சேர்க்கப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்