நெட்வொர்க்கிற்காக 50 அடி உயர ராட்டினத்தில் ஏறிய அமைச்சர் !

திங்கள், 22 பிப்ரவரி 2021 (20:33 IST)
நெட்வொர்க்கிக்காக சுமார் 50 அடி உயர ராட்டினத்தில் ஏறி அமைச்சர் உட்கார்ந்துள்ள வீடியோ மற்றும் புகைபப்டம் வைரலாகி வருகிறது.

இன்று செல்போன் இன்றியமையாததாக மாறிவிட்டாலும் கூட இன்னும் சில இடங்களில் நெட்வொர்க் கிடைக்காமல் மக்கள் சிரமத்தில் உள்ளனர். ஆன்லைன் வகுப்பிற்குக்கூட மாணவர்கள் மரத்தில் ஏறி உட்கார்ந்து படிக்கும் செய்திகளை சமீபத்தில் படித்திருப்போம்.
இந்நிலையில், நெட்வொர்க்கிக்கான சுமார் 50 அடி உயர ராட்டினத்தில் ஏறி அமைச்சர் உட்கார்ந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் அசோக்நகர் பகுதியில் நெட்வொர்க் சரியாகக் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், அம்மாநில அமைச்சர் பிரஜேந்திர சிங் யாதவ் தினமும் 3 மணிநேரம் செல்போன் பயன்படுத்துவதால் 50 அடி உயரமுள்ள ஒரு ராட்டினத்தில் ஏறி காந்த மொபைல்போனைப் பயன்படுத்திவருகிறார். இந்தச் சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்