ஏர்போர்ட்டா? ஏரியா? அம்பன் தாண்டவத்தில் உருகுலைந்த விமான நிலையம் – வைரல் வீடியோ!

வியாழன், 21 மே 2020 (13:00 IST)
வங்க கடலில் உருவான அம்பன் புயல் கரையை கடந்த நிலையில் கொல்கத்தா விமானத்தை முற்றிலும் சேதப்படுத்தியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

வங்கக்கடலில் உருவாகிய அம்பான் புயல் நேற்று மதியம் மேற்கு வங்க மாநிலத்திற்கும் மற்றும் வங்கதேச நாட்டிற்கும் இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 150 முதல் 180 கிலோ மீட்டர் வரை காற்று வீசியதால் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன.

கொல்கத்தாவில் வீசிய பலத்த புயல் காற்றால் கொல்கத்தா விமன நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்கள் பல சேதமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் விமான தளம் முழுவதும் நீர் தேங்கியுள்ளதால் விமானநிலையமே பெரிய ஏரி போன்று காட்சியளிக்கிறது. விமான கூடாரங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட பகுதிகளும் சேதமடைந்துள்ளன.

கொல்கத்தா விமான நிலையம் அம்பன் புயலுக்கு பிறகு….

ஆம்பன் புயலால் சேதமடைந்த கல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் விமான நிலையம்.#Cyclone #Lockdown #TamilNadu #StaySafe #Amphan #CycloneAmphan pic.twitter.com/beWfpPRv5Y

— AIR News Chennai (@airnews_Chennai) May 21, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்