தலை சுத்துது... இந்தியாவில் ரு.2 லட்சம் கோடி அளவுக்கு ’பண ’மோசடி!

சனி, 15 ஜூன் 2019 (16:41 IST)
சமீபகாலமாக இந்தியாவில் பல்லாயிரம் கோடி அளவுக்குப் பணம் பெற்றுகொண்டு, அதனை திரும்பச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச்செல்லும் போக்கு அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் கடந்த 11 நிதி ஆண்டுகளில் 500க்கும் மேலான மோசடி சம்பவங்கள் மூலம் சுமார் 2 லட்சம் கோடிக்கும் அதிகமான அளவில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
 
குறிப்பாக விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சாக்‌ஷி, ஜிஜின் மேத்தா, சந்தேசரா சகோதரர்கள்  போன்றோர் தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் அதிகளவில் கடன் வாங்கிக்கொண்டு அதை திருப்பிச் செலுத்தாதது எல்லோருக்குமே தெரியும்.
 
இதுபோல் கடந்த 11 நிதி ஆண்டுகளில் மட்டும்  சுமார், 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மோசடிகளின் மூலம் 2 லட்சம் கோடிக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும், கடந்த 2008- 2009 ஆம் ஆண்டு நிதி ஆண்டுமுதல் 2018 - 2019 ஆம் ஆண்டு நிதியாண்டு வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 55,34 மோசடி சம்பவங்கள் நடபெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்