டிஜிட்டல் பண பரிவர்த்தனையால் ATM பயன்பாடு குறைந்தததா ?

சனி, 18 ஜூலை 2020 (16:47 IST)
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்கா மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. மூன்றாவதாக இந்தியா உள்ளது.

இந்த நிலையில் பெரும்பாலான மக்கள் கொரொனா ஊரடங்கின் போது டிஜிட்டர் பண பரிவர்த்தனைகள் செய்து வருகின்றனர்.

கடந்த வருடம் மக்கள் பணத்தை ரொக்கமாக எடுப்பதைவிட டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் எடுப்பதை செய்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2019- 2020 ஆம் ஆண்டு காலத்தில் ஜனவரி முதல் மார்ச் மாதக் காலத்தில் கார்டு மற்றும் மொபைல் மூலம் ரூ.10.57 லட்சம் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது.

ஏடிஎம் மூலம் ரூ.9.12 லட்சம் கோடி ரொக்க பணமாக எடுக்கப்படுள்ளாது. இந்நிலையில் தற்போதைய 20 -21 ஆம் ஆண்டு காலாண்டிலும்  கார்டு மற்றும் மொபைல் மூலம் பணம் செலுத்துதல் மூலம் ரூ.10.97 லட்சம் கோடி பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளாதாக தகவல் வெளியாகிறது.

பல்வேறு மக்கள் டிஜிட்ட பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளாத நிலையில் சமீக காலமாக டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறியுள்ளனர். அதில், ரீசார்ஜ்,  மின்கட்டணம், கலிவிக் கட்டணம்  போன்றவற்றை  ஆன்லைன் மூலாமகவும் பாதுகாப்பு அம்சம் உள்ள யுபிஐ மூலமாகச் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மக்களிடையே கார்டு பயன்பாட்டை விட  டிஜிட்டல் மூலம் பணப் பரிவர்த்த்னை மேற்கொள்வது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்