நமக்கே ஆக்ஸிஜன் பத்தல… இதுல இவ்ளோ ஏற்றுமதி வேறயா? அதிர்ச்சி தகவல்!

புதன், 21 ஏப்ரல் 2021 (17:45 IST)
2021 ஆம் ஆண்டில் இந்தியா வெளிநாடுகளுக்கு சுமார் 9300 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ஏற்றுமதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகள் மீண்டும் நோயாளிகளால் நிரம்ப ஆரம்பித்துள்ளன. இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா அலையின் மிகப்பெரிய பின்னடைவாக ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்தியா 2021 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 9300 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை ஏற்றுமதி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திரவ ஆக்ஸிஜனாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில் இவை மருத்துவ மற்றும் தொழில்சாலை பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்