குடிநீர் பிரச்சினையை தீர்க்க....திட்டம் தீட்டி வருகிறோம் - எம்.ஆர்.விஜய பாஸ்கர் !

திங்கள், 16 மார்ச் 2020 (21:45 IST)
நிரந்தரமாக முதல்கட்டமாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அளவில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டம் தீட்டி வருவதாக கரூர் அருகே அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.
 
கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 9 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகளுக்காக பூமி பூஜை மற்றும் மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் அடுத்த மேட்டுப்பாளையம் காவிரிக்கரை பகுதிகளில் ஆத்தூர், மண்மங்கலம், கடம்பங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு புதிய காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான பூமி பூஜையினை ரூ 8 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்., நிரந்தரமாக முதல்கட்ட பஞ்சாயத்தினுடைய குடிநீர் பிரச்சினையை தீர்க்க, 8 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் இந்த திட்டம் வழிவகுக்கப்பட்டுள்ளது. அங்கே 15 மீட்டர் ஆழம் போட்டு, பைப் போடப்பட்டு, ஆற்றில் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் பைப் லைன் உடையாது. மேலும் டிரை கண்டிசைன்லையும் தண்ணீர் வரும் ஆகவே சிறந்த திட்டத்தினை நமக்கு தமிழக முதல்வரும், துணை முதல்வரும் கொண்டு வந்துள்ளனர்.

இதே போல, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வழிவகுக்கப்பட்டு, திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாகவும்,. அதற்காக தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

மேலும்., இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கரூர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ஏ.ஆர்.காளியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்