வகுப்பு லீடர் தேர்வில் தோல்வி : மாணவர் தற்கொலை

சனி, 20 ஜூலை 2019 (21:21 IST)
தெலங்கானா மாநிலடம் நல்கொண்டாவில் உள்ள   பள்ளியில் ஒரு வகுப்பு மாணவர்களிடையே வகுப்பு தலைவரை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது.
வகுப்பு லீடருக்கு ஆன போட்டியில் 13 வயதே ஆன ஒரு மாணவர் , தன் சக மாணவியிடம் ஆரு ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
 
இதனால் அவரை வகுப்பில் எல்லோரும் கேலி செய்துள்ளனர். இந்நிலையில் தான் லீடர் தேர்வில் தோல்வி அடைந்ததாலும், சக மாணவர்களின் கிண்டலாலும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 
 
இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே  போலீஸார் சிட்யால் மற்றும் ரமன்னபேட் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே பள்ளி மாணவனின் சடலம் இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து அங்கு சென்று போலீஸார் சோதனை நடத்தினர். அதில் தனியார் பள்ளி மாணவன் என்பதை கண்டறிந்தனர். இந்நிலையில் மகனைக் காணவில்லை என்று புகார் அளித்ஹ்த பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு மாணவனின் உடல் அடையாளம் காணப்பட்டது இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்