சந்திரயான் 2 விண்ணில் ஏவும் பணி திடீர் நிறுத்தம்

திங்கள், 15 ஜூலை 2019 (08:45 IST)
சந்திரயான் 2 விண்ணில் ஏவும் பணி திடீரென நிறுத்தப்ப்பட்டதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்ணில் ஏவும் பணி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டதாகவும், சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது
 
சந்திரயான் 2 விண்ணில் செலுத்த நேற்று காலை 6.51 மணிக்கு கவுன்டவுன் தொடங்கியது. சந்திரயான் 2 இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருந்த நிலையில் கவுண்ட்டவுன் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது. 
 
இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் மிக முக்கியமான மைல்கல் என்று கூறப்படும் சந்திரயான் 2, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள உலகின் முதல் விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திராயன் 2 செயற்கைக்கோள் இந்திய தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் என்பது ஒரு பெருமைக்குரிய விஷயம். நிலவில் மெதுவாக தரையிறங்கும் செயற்கைக்கோளை உருவாக்கிய நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையும் இந்த செயற்கைகோளால் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் நிலவில் மெதுவாக தரையிறகும் செயற்கைகோளை வெற்றிகரமாக அனுப்பியுள்ளனர்.
 
நிலவின் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கும் முதல் இஸ்ரோவின் செயற்கைக்கோளான சந்திராயன் 2 செயற்கைகோளில் ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த செயற்கைக்கோளை உருவாக்க சுமார் 960 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் சரியாக ஒரு வருடம். இந்த மிஷனில் மொத்தம் 14 பேர் பணியாற்றினார்கள். இதில் ஒருவர் நாசாவைச் சேர்ந்தவர் என்பதும் மற்ற 13 பேரும் இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்