டிசம்பர் இறுதி வரை பள்ளிகள் இயங்க வாய்ப்பில்லை! – மத்திய அரசு தகவல்

செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (12:44 IST)
பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என கேள்வி எழுந்த நிலையில் டிசம்பர் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் அமித் கரே தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் இருந்த சூழலில் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பள்ளிகள் இன்னமும் திறக்கப்படாததால் நடப்பு ஆண்டிற்கான பாடங்களை ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய உயர்கல்வித்துறை நிலைக்குழு கூட்டத்தில் பேசிய அதன் செயலாளர் அமித் கரே “நாட்டில் தற்போதுள்ள கொரோனா பாதிப்புகளால் டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்துவது ஊக்குவிக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும் செப்டம்பர் மாதத்திற்குள்ளாக கல்லூரி இறுதி தேர்வுகளை நடத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்