சிபிஐ நுழைய கூடாது: அதிரடியாக உத்தரவு போட்ட இரண்டு மாநிலங்கள்

சனி, 17 நவம்பர் 2018 (09:24 IST)
சோதனைகள் மற்றும் வழக்கு விசாரணை குறித்து சிபிஐ அதிகாரிகள் தங்களுடைய மாநிலத்தில் நுழைய வேண்டுமெனில் மாநில அரசின் அனுமதியை பெற வேண்டும் என இரண்டு மாநிலங்கள் உத்தரவு போட்டுள்ளதால் தேசிய அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சோதனை மற்றும் வழக்கு விசாரணைக்காக தங்கள் மாநிலத்திற்குள் சிபிஐ நுழைய தடை விதித்து சமீபத்தில் ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் இதேபோன்ற ஒரு உத்தரவை மேற்குவங்க அரசும் பிறப்பித்துள்ளது.

மேலும் மேற்கு வங்கத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் நுழைவதற்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த, மாநில அரசின் தடையில்லா சான்று திரும்ப பெற்றுக்கொள்வதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அறிவித்துள்ளார். இதனால் இனிமேல் மேற்குவங்க மாநில அரசின் முன் அனுமதியின்றி சி.பி.ஐ. அதிகாரிகள் எந்தவொரு சோதனைக்கும் மாநிலத்திற்குள் நுழைய முடியாது.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் மத்திய அரசு சிபிஐ அமைப்பை அடிக்கடி பயன்படுத்துவதால் ஆந்திரா, மேற்குவங்கம் ஆகிய இரு மாநிலங்களூம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. இதே உத்தரவை மற்ற மாநிலங்களும் பிறப்பித்தால் சிபிஐயின் வானளாவிய அதிகாரம் சுருங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்