நண்பனின் வீட்டில் 500 ரூபாய் திருடிய இளைஞன்… அதற்கு தண்டனை மரணமா?

வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (17:13 IST)
ஒடிசாவில் தன் வீட்டில் பணத்தை திருடிய சிறுவனை நண்பனின் தாய் அடித்ததால் அவர் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கியாபனோபோஷி கிராமத்தில் ராஜன் பெஹெரா .14 வயதாகும் இந்த சிறுவன் தன்னோடு படிக்கும் சக மாணவனின் வீட்டுக்கு சென்று விளையாடியுள்ளார். அப்போது அங்கிருந்து 500 ரூபாய் பணத்தைத் திருடியதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து அவனை வீட்டுக்கு அழைத்து நண்பனின் தாயார் குச்சியால் அடித்துள்ளார். இதில் அந்த மாணவனுக்கு உடலில் சில இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டுக்கு சென்ற அவர் சில மணிநேரங்களில் உயிரிழந்துள்ளார்.இது சம்மந்தமாக அந்த மாணவனின் பெற்றோர் மற்றும் கிராமவாசிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சஸ்மிதா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்