ரஜினியை சந்தித்த சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன்: வைரல் புகைப்படம்

புதன், 24 மார்ச் 2021 (08:14 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் இதே ஸ்டூடியோவில் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருள் நடித்துவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பின் இடையில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருள் நேரில் சந்தித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருள் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. அதே போல் அண்ணாத்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்குள் படம் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்