மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்வது எப்படி...?

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேலை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயா எழுந்து குளித்து விட்டு சூரிய உதயத்தின்போது காலையில் வீட்டில் செய்யவேண்டிய பூஜையை முடிக்கவேண்டும். அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி  தரிசனம் செய்யவேண்டும். 
பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலகரித்து நன்பகலில் குளித்து மலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில்  சிவபூஜை செய்யவேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படி பூஜை செய்தாலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை  செய்தால் கூடுதல் உத்தமம்.
 
மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பிரம்மசசரியத்தைக் கசைபிடிக்க வேண்டும். சிந்தையில்  அமைதியுடன் சிவ புராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிடவேண்டும் என்கின்றனர்  முன்னோர்கள்.
 
சிவ வழிபாடு:
 
மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திரு நீறு அணிந்து கையில் உத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவபூஜை செய்தோ அல்லது கோவில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும்.
 
சிவராத்திரி விரதல் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன் தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும் யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்