பிரபல நிறுவனத்திற்கு 5 நிமிடத்தில் ரூ.1.20 லட்சம் கோடி இழப்பு...

சனி, 15 பிப்ரவரி 2020 (19:08 IST)
Loss of Rs .1.20 lakh cr in 5 minutes to the famous company

அமெரிக்கா ராணுவத்திற்கான தொழிற்நுட்ப ஒப்பந்தம் இடைக்காலத் தடை விதிப்பட்டதை அடுத்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.
 
உலகில் அதிக மக்களால் மைக்ரோசாப் நிறுவனத்தில் மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,நேற்று 5 நிமிடத்தில் இந்நிறுவனத்திற்கு சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
 
அமெரிக்கா ராணுவத்தின் தகவல்கள் மற்றும் தரவுகளை ரக்சசியமாகப் பாதுகாப்பதற்காக ரூ.71 ஆயிரத்து 120 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் பெறுவதில் அமெசான் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த வாய்ப்பை பெற்றது.
 
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டின் பேரில் மைக்ரோப்சட் இந்த வாய்ப்பை பெற்றதாக அமேசான் குற்றம் சாட்டியது. பின், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதனால், மைக்ரோசப்ட் நிறுவனம் ஐந்து நிமிடத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இழப்பை சந்தித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்