ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு குறித்து பாகிஸ்தான் முக்கிய முடிவு!

வெள்ளி, 22 மார்ச் 2019 (07:25 IST)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளை இந்திய தொலைக்காட்சிகள் மட்டுமின்றி உலகின் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டு ஒளிபரப்பி வருகின்றன. இதற்கு காரணம் உலகின் முன்னணி வீரர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் ஒரே போட்டி ஐபிஎல் என்பதால்தான் இந்த போட்டிகளை ஒளிபரப்புவதன் மூலம் கோடிக்கணக்கில் லாபல் பெறலாம்.

இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் பிரிமியர் லீக் போட்டிகளை இந்திய தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப மறுத்துவிட்டன. இதனால் விளம்பரங்கள் மூலம் கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை பாகிஸ்தான் பிரிமியர் லீக் நிர்வாகம் இழந்தது

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக  தங்களது நாட்டில் ஐபில் போட்டிகளை ஒளிபரப்பப்போவதில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரான ஃபாவத் அகமது சவுத்ரி உறுதி செய்துள்ளார். ஆனால் பாகிஸ்தான் நாட்டில் ஒளிபரப்பு செய்யாததால் ஐபிஎல் நிர்வாகத்திற்கு பெரிய இழப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்