சருமத்தில் உள்ள கருமையை போக்கும் இயற்கை அழகு குறிப்புகள்....!!

தக்காளி சாற்றை நன்கு முகத்தில் தடவி சிறிது மசாஜ் செய்து நன்கு ஊற விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை தினந்தோறும் செய்து வந்தால் முகத்தில் சேரக் கூடிய அழுக்கை நீக்கி முகம் பளிச் என காணப்படும்.
தயிரை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து அதன் பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனை தினந்தோறும் செய்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது.  இவ்வாறு செய்தால் முகத்தில் பலவகையான மாற்றங்கள் ஏற்படும்.
 
எலுமிச்சை சாறு எடுத்து அதனை சிறிது தண்ணீரில் கலந்து அதனை தூங்கப் போகும் முன்பு முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனை  வாரத்திற்கு மூன்று முறை செய்யலாம். இவ்வாறு செய்வதனால் சருமத்தின் நிறம் நன்றாக மாறும்.
 
உருளைக்கிழங்கை வாரத்திற்கு ஒரு முறையாவது அரைத்து அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து அதன் பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.  இவ்வாறு செய்தால் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும்.
 
பப்பாளியை அரைத்து அதனை முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து அதன் பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதனால்  நமது சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள், இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் போன்றவை அகலும். அதுமட்டுமின்றி முகம் பார்ப்பதற்கு பளபளவென்று இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்