முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை முற்றிலும் நீக்க உதவும் கற்றாழை ஜெல்...!!

முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் தான் வயதான தோற்றத்தை கொடுக்கும். இந்த வயதான தோற்றத்தை தடுப்பதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது.

கற்றாழை ஜெல் பயன்படுத்துவதால் தோல் மிருதுவனதாக இருக்கும். முகப்பரு மற்றும் எண்ணெய் வழியும் முகத்தை தடுக்கவும் இந்த கற்றாழை பயன்படுகிறது.
 
உலர் மற்றும் மங்கலான சருமத்தை மென்மையான சருமமாக மாற்ற, கற்றாழை, தேன் மற்றும் வெள்ளரி கொண்ட பேஸ் மாஸ்கை தயார் செய்யவும். இந்த மூன்று பொருட்களுமே நீர்த்தன்மை அளிக்க கூடியவை. இவற்றை பயன்படுத்தும் போது, சருமம் மென்மையாகி பொலிவு பெறுகிறது. 
 
ஒரு வெள்ளரி, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் கொஞ்சம் கற்றாழையை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை பூசிக்கொண்டு 20 நிமிடம் விட்டு பின்னர்  கழுவிக்கொள்ளவும்.
 
கற்றாழை வெட்டி அதில் உள்ள ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவேண்டும். பின்னர் அதை பயன்படுத்துவதற்கு முன்னர் ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை போட்டு பிரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும். பின்னர் அதை முகத்திற்கு பயன்படுத்தலாம்.
 
இரண்டு கற்றாழை இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு போதுமானது. தேவை எனில் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம். இதில் கொஞ்சம் பாதாம் எண்ணெய் சேர்த்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் இரவு படுக்கச்செல்லும் முன் தடவிக்கொள்ளவும். இரவு அப்படியே வைத்து காலை எழுந்ததும்  கழுவிக்கொள்ளவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்