ஜியோ vs வோடபோன்; முதல் இடத்தில் யாரு? ஏர்டெல் லிஸ்ட்லயே இல்ல...

செவ்வாய், 19 மார்ச் 2019 (14:51 IST)
இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பிப்ரவரி மாதத்திற்கான 4ஜி இண்டர்நெட் ஸ்பீட் டெஸ்ட்டை நடத்தியுள்ளது. இந்த சோதனையில் ஜியோ மற்றும் வோடபோன் முதல் இடத்தை பிடித்துள்ளது. 
 
ஆம், டிராய் நடத்திய 4ஜி இண்டர்நெட் ஸ்பீட் டெஸ்ட் அப்லோட் மற்றும் டவுன்லோட் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் டவுன்லோட் ஸ்பீடில் ஜியோ முதல் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் அப்லோட் ஸ்பீடில் வோடபோன் முதல் இடத்தை பிடித்துள்ளது. 
ஜியோவின் டவுன்லோட் ஸ்பீடு விநாடிக்கு 20.9 எம்பி ஆக உள்ளது. ஏர்டெல் டவுன்லோடு ஸ்பீடு விநாடிக்கு 9.4 எம்பி ஆகாவும் வோடபோன் மற்றும் ஐடியாவின் டவுன்லோடு ஸ்பீடு 6.8 எம்பி மற்றும் 5.7 எம்பி ஆக இருந்துள்ளது. இந்த முடிவை பார்க்கும் போது ஜியோவுடன் போட்டி போட எந்த மற்ற நெட்வொர்க்காளும் முடிவவில்லை.
 
ஆனால், அப்லோடு ஸ்பீடு டெஸ்டில் வோடபோன் நிறுவனம் விநாடிக்கு 6 எம்பி ஆக உள்ளது. விநாடிக்கு 5.6 எம்பி அப்லோடு ஸ்பீடுடன் ஐடியா இரண்டாம் இடத்திலும், ஜியோ விநாடிக்கு 4.5 எம்பி மற்றும் ஏர்டெல் விநாடிக்கு 3.7 எம்பி வேகத்துடன் மூன்றாவது  நான்காவது இடங்களில் உள்ளன. அப்லோட் ஸ்பீடை பொறுத்த வரை பெரிதான வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்