இந்த வயசுலயும் இப்படி ஒரு காதலா..! இளசுகளை பொறாமை பட வைத்த - நட்சத்திர ஜோடி!

சனி, 28 டிசம்பர் 2019 (15:05 IST)
திரைத்துறையில் இருந்து அறிமுகமாகி சேர்ந்து படங்களில் நடித்து பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடிகளில் முக்கியமான ஜோடி  கஜோல்  – அஜய் தேவ்கன். பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் நடிகைகளான இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 
 
கடந்த 1999ம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு  அடைந்த 21 ஆண்டுகளுக்கு மேலாக அழகிய ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர்.இவர்களுக்கு நைசா தேவ்கன் (16)  என்ற மகளும் யுக் தேவ்கன்(9) என்ற மகனும் இருக்கின்றனர். ஆனாலும், இந்த ஜோடிக்கு வயது கூடிக்கொண்டே போகிறதை தான் நம்மால் பார்க்க முடிகிறது. 
 
அந்த வகையில்  சமீபத்தில் தனது ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்தை தெரிவித்து கஜோல் – அஜய் தேவ்கன் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை தந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளனர். தற்போது கணவன் , மனைவி இருவரும் சேர்ந்து புகழ்பெற்ற மராட்டிய போர்வீரர் தனாஜி மாலுசாரேவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் "தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்" என்ற படத்தில் நடித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்