அக்டோபர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மிதுனம்

புதன், 30 செப்டம்பர் 2020 (15:49 IST)
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)
 
கிரக நிலை:
தைரிய ஸ்தானத்தில் சுக்ரன்  - சுக ஸ்தானத்தில் சூர்யன் -  பஞ்சம ஸ்தானத்தில் புதன்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் குரு, சனி - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
கிரகமாற்றங்கள்:
08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
நடக்கும் விசயங்களை முன் கூட்டியே தீர்மானிக்கும் திறனுடைய மிதுன ராசி அன்பர்களே உங்களுக்கு இந்த மாதம் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும்
 
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். உறவினர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். 
 
தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். ஆனாலும் லாபம் அதிகரிக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். 
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது.
 
பெண்களுக்கு திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும்.
 
கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.
 
அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. 
 
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.
 
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் இடைவிடாத உழைப்பால் உடல்நிலையில் சோர்வு உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் முடிந்தவரைத் தவிர்த்துவிடுவது நல்லது. பணவரவுகளில் தடைகள் நிலவுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். 
 
திருவாதிரை:
இந்த மாதம்  கல்வி பயில்பவர்கள் சற்றுக்கூடுதல் கவனம்செலுத்திப் படித்தால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெறமுடியும். நல்ல நண்பர்களின் உதவிகள் தக்கசமயத்தில் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும்.  
 
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளும் ஏற்படும். 
 
பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெண்ணெய் சாற்றி வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி; 
சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்