உட‌ல் உறு‌ப்பு பா‌தி‌ப்பு ஜாதக‌த்‌தி‌ல் தெ‌ரியுமா?

வெள்ளி, 1 ஜூலை 2011 (19:23 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதும், அந்த உடல்நலக் குறைவால் எந்தப் பகுதி அல்லது எந்த உறுப்பு அவருக்கு பாதிக்கப்படலாம் என்று ஜோதிடத்தால் கூற முடியுமா? முடியும் என்றால் எப்படி?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: சமீபத்தில் கூட ஒருத்தர் வந்திருந்தார். அவருக்கு செவ்வாயும், இராகுவும் ஒரே இடத்தில் இருந்தது. அவர் தனுர் லக்னம், தனுர் ராசி. செவ்வாயும், இராகும் ஒன்றாக இருந்து செவ்வாய் திசை தொடங்கியிருக்கிறது. அவரிடம் 5 வருடங்களுக்கு முன்பே சொல்லியிருந்தேன், செவ்வாய் திசை வரும் போது தைராய்டு சோதனை செய்து கொள்ளுங்கள், தைராய்டு பிரச்சனை வரும் என்று. கொஞ்ச காலமாக சோர்ந்து சோர்ந்து படுத்திருக்கிறார்கள். உடனே அவருடைய கணவர், உனக்கு சந்திர திசை முடிந்து செவ்வாய் திசை தொடங்கும் போது தைராய்டு பிரச்சனை வரும் என்று வித்யாதரன் சொன்னாரே என்று கூட்டிக்கொண்டு போய் டெஸ்ட் எடுத்திருக்கிறார். பரிசோதனையில் தைராய்டு இருப்பது தெரியவந்து, தற்போது மாத்திரை சாப்பிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதனால் தசா புத்திகளுக்குத் தகு‌ந்த மாதிரி, பாதிக்கப்பட்ட உறுப்பு எது, எந்தப் பகுதியில் எந்த உறுப்பில் நோய் தொடங்குகிறது. எத்தனை வருடங்களுக்கு முன்பு தொடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். சமீபத்தில் கூட ஒருவர் ஜாதகத்தைக் காண்பித்தார். அவருக்கு சந்திரன், செவ்வாய், இராகு மூன்று கிரகமும் ஒன்றாக இருக்கிறது. இந்த மூன்று கிரகத்தையும் சனி பார்க்கிறார். இந்த மூன்று கிரகமும் கடகத்தில் இருக்கிறது. சனி ரிஷபத்தில் உட்கார்ந்து 3ஆம் பார்வையாக பார்க்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு இராகு திசை ஆரம்பித்திருக்கிறது.

அனைத்தையும் பார்த்துவிட்டு, உங்களுக்குப் புற்றுநோய் இருக்கும், அதிலும் மார்பகப் புற்றுநோய் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவரைப் பொறுத்தவரையில் எந்த அறிகுறியும் அவருக்குத் தெரியவில்லை. ஆனால் பரிசோதித்த பிறகு 3வது கட்டத்தில் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அதுகுறித்து அவருக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்திருக்கிறது. தற்போது கீமோ தெரபி எடுத்து வருகிறார்.

அதனால் இந்த விஷயத்தில் உறுதியாக அருதியிட்டுச் சொல்ல முடியும். ஏனென்றால் மருத்துவ ஜோதிடம் என்று ஒரு பகுதி இருக்கிறது. அதையும் நாம் பார்க்கிறோம். P.hd. பெற்று ஆய்வேடு வைத்திருப்பதால், எல்லா வகையிலும் அலசிப் பார்க்கிறோம். அதனால் எந்தக் காலத்தில் நோய் உருவாகும், எந்த விதத்தில் உருவாகும், உடலின் எந்தக் கூறுகளில் உருவாகும் என்பதை கண்டுபிடிக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்